500 ருபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 500 ருபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை உறுதியாக இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்..
“500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமோ ரிசர்வ் வங்கிக்கு இல்லை.
இதுகுறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை ரூ1.80 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற அருகில் உள்ள வங்கிக் கிளைகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். அவசரப்படுவதற்கு எந்த தேவையும் இல்லை” என்று கூறியுள்ளார்.