மருத்துவ தாத்தாச்சாரியார் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழை எளிய மக்களுக்காக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மருத்துவம் பார்த்த கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதி சேர்ந்த தாத்தாச்சாரியார் என்ற மருத்துவர் உயிரிழந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதி சேர்ந்தவர் தாத்தாச்சாரியார் 1932 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1990 ஆம் ஆண்டு வரை ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனையில் 24 ஆண்டுகள் மருத்துவத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.
எனினும் ஏழை எளிய மக்களுக்குச் சேவையாற்ற முன்வந்தவர் தாத்தாச்சாரியார். இவர் தனது வீட்டில் மருத்துவமனை அமைத்து எளிய மக்களுக்கு மருத்துவ பார்த்த அவர் அந்த மக்களிடம் ஐந்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய்களை மட்டுமே கட்டணமாகப் பெற்று வந்தார். மேலும் அப்பகுதி மக்களிடமும் பெரிதாகவும் பேசப்பட்டுப் பிரபலமானார். மேலும் ஐந்து ரூபாய் மருது என்று பெயர் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து வயதானாலும் மக்களுக்கு ஆற்றும் மருத்துவ சேவையை அவர் விடவில்லை. தொடர்ந்து தனது 97வது வயது வரை மக்களுக்காக ஐந்து ரூபாய் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு மூன்று முறை இதய அறுவை சிகிச்சை செய்த பின்னர் வயது புதிர்வு காரணமாக உயிரிழந்தார். மேலும் இவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து ரூபாய் மருத்துவர் தாத்தா சாரி யாரின் உடலுக்கு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
https://youtu.be/Unm9Sq3a-C0