சூர்யாவின் நரகாசுர நடிப்பில் உருவாகி உள்ள RETRO படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்கள் மட்டுமே இயக்கி பெயரையும் புகழையும் பெற்ற இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகிவரும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
Also Read : சாலை விபத்தில் ஏற்பட்ட பேரிழப்பு – 36 ஆண்டுகளாக போக்குவரத்தை சரிசெய்யும் தன்னார்வலர்..!!
இதையடுத்து தற்போது நடிகர் சூர்யாவின் 44 ஆவது படமான RETRO திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘RETRO’ திரைப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.