வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக (Remal storm) வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை மையம் அந்த தீவிர புயலுக்கு “ரீமல்” என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..
“வங்க கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கில் சுழற்சி நிலவி வருகிறது.
இதனால் அப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வட கிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.
இதையும் படிங்க : கேரள அரசின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது – அன்புமணி!
வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (24.05.24) வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
மேலும் நாளை மறுநாள் (25.05.24) சனிக்கிழமை வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ஓமன் நாடு பரிந்துரைப்படி ரீமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் வருகிற மே 20 ஆம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரீமல் புயல் (Remal storm) வடக்கு பகுதி நோக்கி நகரும் பொழுது தமிழகத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்க கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.