டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியிடம், மல்யுத்த வீரர் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறாமல் அமைச்சர் தலைதெறிக்க ஓடிய நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார்கள் தெரிவித்து இந்திய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும், இந்த மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதிவிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து புதிய நாடாளுமன்ற கடிதத்தை நோக்கிப்பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர் வீராங்கனைகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு திரைத்துறை பிரபலங்கள் ,அரசியல்கட்சி தலைவர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பூதாகரமாகி உள்ளது.நாட்டிற்காகத் தங்கப் பதக்கம் மற்றும் பெருமை தேடித் தந்தவர்களைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மோசமாக நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியிடம், மல்யுத்த வீரர் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் ஏதும் கூறாமல் தலைதெறிக்க ஓடிய நிகழ்வு சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.