பெங்களூருவில் சூடாக உணவு வழங்காத பிரபல உணவகத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள உடுப்பி கார்டன் உணவகத்தில் காலை உணவு சாப்பிடச் சென்றபோது சூடாக வழங்கப்படவில்லை என நுகர்வோர் குறைதீர் ஆணையம் புகார் அளித்திருந்தார் .
உணவகத்தில் உணவு சாப்பிட முடியாமல் போனதைத் தொடர்ந்து, ரத்தக் கொதிப்பு மருந்துகளை உட்கொள்ள முடியாமல் போனதாகவும் குறைதீர் ஆணையத்தில் அந்த பெண் முறையிட்டிருந்தார்.
Also Read : கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது..!!
இதையடுத்து உணவை சூடாக வழங்காத அந்த உணவகத்திற்கு 7,000 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த பெண்ணுக்கு தற்போது நியாயம் கிடைத்தது மகிழ்ச்சியை கொடுத்தாலும் இது ரொம்பவே தாமதமான நடவடிக்கை என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.