கடலூர் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் மற்றும் பில் கலெக்டர் கைது ( Bribery ) செய்யப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செல்வம் என்பவரிடம் சொத்து வரி நிர்ணயம் செய்ய வருவாய் ஆய்வாளர் மற்றும் பில் கலெக்டர் 50,000 லஞ்சம் கேட்டுள்ளனர். அவரிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னபோதும் தவணை முறையில் கொடுக்க வற்புறுத்தியுள்ளனர்.
Also Read : மனைவியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்த கணவன் மின்சாரம் தாக்கி பலி..!!
இதனால் மனமுடைந்த செல்வம் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடியுள்ளார். இதையடுத்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பதுங்கி இருந்தனர்
அப்போது 50 ஆயிரத்தில் முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துவந்து வருவாய் ஆய்வாளர் மற்றும் பில் கலெக்டர் ஆகியோருடன் செல்வம் கொடுத்துள்ளார்.
லஞ்ச பணத்தை பெற்றதும் ஆதாரத்துடன் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் பில் கலெக்டர் ( Bribery ) லட்சுமணன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.