கல்லீரல் பாதிப்பால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் (RIP santhan) சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுடைய கொலை வழக்குத் தொடர்பில் நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர் ,
இதையடுத்து அவர்களில் சிலர் சிறப்பு முகாமிலே தங்க வைகைப்பட்டு மற்றொரு சிறை வாசத்தை அனுபவித்து வந்தனர் .
இவர்களில் இலங்கையைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இலங்கைக்கு சென்று குடும்பத்தினருடன் இணைந்து வாழ அனுமதி கோரிய போதும் இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இத்தகைய நிலையில் சாந்தன் குடுமபத்தினருடன் சேர்ந்து வாழ ஆசை படுவதாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது .
இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களோடு இணைந்து வாழ வழியேற்படுத்தி கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது .
இத்தகைய நிலையில்,கல்லீரல் பாதிப்பு காரணமாக சாந்தனின் உடல் நிலை மிக மோசமாக சென்றிருப்பதானது.
சாந்தனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த அவசர சூழ்நிலையை கவனத்தில் எடுத்தும் மத்திய அரசும், தமிழக அரசும், இலங்கை அரசும் உடனடியாக பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு
சாந்தனை ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுத்து இலங்கைக்கு அனுப்பி வைத்து அவர் குடும்பத்தினருடன் இணைந்து வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருச்சி முகாமில் இருந்த சாந்தனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஒரு மாதம் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சாந்தன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்ட அவர், தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்துவர, கடந்த 24ம் தேதி மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
Also Read : https://itamiltv.com/tamil-fighter-pilot-featured-in-gaganyaan-project/
கட்சி நிமிடத்தில் அனுமதி கொடுத்து என்ன பயன் இப்பாதற்கேப இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாந்தத்தின் மறைவுக்கு தற்போது (RIP santhan) அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.