வங்காள தேசத்தில் பேருந்து ஒன்று குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேச நாட்டின் பரிஸ்ஹல் மாகாணதின் பண்டாரியா நகரில் இருந்து இன்று பேருந்து ஒன்று 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பரிஸ்ஹல் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஜலாக்தி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்திற்குள் இருந்த பயணிகள் அனைவரும் குளத்திற்குள் மூழ்கினர். இந்த விபத்து குறித்து உடனடியாக காவல் துரையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் பேருந்திற்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர்.
ஆனாலும், இந்த விபத்தில், நேரில் மூழ்கி பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் 35 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததானால் ஆறு, குளங்களில் நீர் நிறைந்து காணப்படும் நிலையில், பேருந்து குளத்திற்குள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.