மணிப்பூர்(manipur) மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி முதல் மைத்தேயி, குக்கி இனத்தைச் சேர்ந்த மக்களிடையே இட ஒதுக்கீடு மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறைகளால் இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர் 1000க்கும் மேற்பட்டவர்கள் படுங்காயம் அடைந்து உள்ளனர்.
இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது குறித்து மத்திய அரசுக்கு, மணிப்பூர் விவசாயத்துறை ஆணையர் ஆர்.கே.தினேஷ் மத்திய அரசின் ஒப்புதலுக்குகாக அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்க்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது.மேலும் மணிப்பூர் விவசாயிகளுக்கு ரூ.38.06 கோடி இழப்பீட்டை மத்திய அரசு வழங்க உள்ளது.
இதுகுறித்து விவசாயத்துறை ஆணையர் ஆர்.கே. தினேஷ் கூறியதாவது:
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக இழப்பீடு வழங்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று ரூ.38.06 கோடியை வழங்க உள்ளது.இந்த பணியானது நவம்பர் மாதத்துக்குள் இந்தத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கலவர சம்பவங்களால் சுமார் 5,127 ஹெக்டேர் நிலங்களில் விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.