RS Bharati-கலைஞர் இறக்கும் பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இறக்க காரணம் விஜயகாந்த் தான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி
டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், எம்.பிக்கள், இடதுசாரி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த இப்போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது.
தி.மு.க. சார்பில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி,திமுக எம்பி கனிமொழி,ஆ .ராசா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பாக நெல்லை பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஈடுபட்டார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,”முதல்வரின் ஊக்கத்தொகை பெறும் இளம் பெண்கள் வருங்காலத்தில் மருத்துவர் ஆட்சியர் உயர் அதிகாரிகள் பொறுப்பில் கண்டிப்பாக அமர்வார்கள். என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் ,திமுக தலைவர் கருணாநிதி மறைந்த போது அண்ணா அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கலைஞரை அடக்கம் செய்ய இடம் கொடுக்காமல் மறுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் யாரும் கேட்காமலே விஜயகாந்துக்கு அரசு மரியாதை வழங்கினார் .
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்திற்கு கலைஞர் அழைப்பு விடுத்தார்.அப்போதே எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் கண்டிப்பாக முதல்வராக இருந்திருப்பார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755821907159757291?s=20
கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ஜெயலலிதா இறந்திருக்க மாட்டார். உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து தற்போது வரை இருந்திருப்பார்.
விஜயகாந்த் செய்த துரோகத்தின் காரணமாகத்தான் கலைஞர் உயிரிழந்தார். கலைஞர் இறக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இறக்க காரணம் விஜயகாந்த் தான் என கடுமையாக விமர்சித்தார்.
மேலும் மத்திய அரசு எதிர்கட்சிகளை நீதிமன்றம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ மூலம் மிரட்டுகிறது.
டெல்லி முதல்வர் கெஜிர்வால் உள்ளிட்ட மாநில முதல்வர்களை மத்திய அரசு தொடர்ந்து கைது செய்ய துடிக்கிறது.
யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலின் கால் முடியை கூட தொட்டுப் பார்க்க முடியாது என ஆர்.எஸ்.பாரதி(RS Bharati) தெரிவித்தார்.
PUBLISHED BY : S.vidhya