சனாதன சக்திகளுக்கு துணைபோகும் வகையில் சீமானின் செயல்பாடுகள் மாறிவருகிறது என விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
ஏற்கனவே சீமானிடம் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆன்மீகம் என்பது வேறு அரசியல் என்பது வேறு, சற்றும் எதிர்பாராத வகையில், சீமானின் செயல்பாடுகள் சனாதன சக்திகளுக்கு துணைபோகிறது.
கிறிஸ்தவ மதத்திற்கு இந்து மதம் தோன்றியது என்று வைத்துக்கொண்டாலும், இஸ்லாமிய மதத்திற்கு முன்னதாக தோன்றியது என்றாலும் இந்து மதம் உலக அளவில் பரவவில்லை. ஆனால் இஸ்லாமிய மதத்தை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. சைவம் வைணவம் இவையெல்லாம் இந்து மதத்தோடு கரைந்து விட்டது.
அதே போன்று கிறிஸ்தவ மதமும் ஏனைய நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்துக்கள் வேறு நாடுகளில் வாழ்கிறார்கள் என்று சொல்லமுடியுமே தவிர, இந்தியாவை போன்று ஒரு நாடு இந்து மதத்தை பின்பற்றுகிறது என்று சொல்லமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு கருத்துக்களை அவர் கூறியுள்ள முழு வீடியோவை கீழ்காணும் லிங்கில் காணுங்கள்: