வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் வருடாவருடம் அக்.16 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் விடுதலை களம் அமைப்பினர், புதுச்சத்திரம், பொம்மைக்குட்டைமேடு ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று கட்டபொம்மனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக விடுதலைக்களம் அமைப்பின் தலைவர் நாகராஜ் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். இதன் பிறகு கட்டபொம்மன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், காந்தியவாதி ரமேஷ், பாஜக பிரமுகர் பிரணவ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து அனுமதியின்றி பேரணியாக சென்ற விட்தலைக் களம் அமைப்பின் தலைவர் நாகராஜ் உட்பட 100 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.