உக்ரைனின் பெரிய நகரான கார்க்கிவ் பகுதியில் மீண்டும் ரஷிய படைகள் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த குண்டு விச்சு தாக்குதலில் 8 வயதுக் குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில், கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உக்ரைனின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள மாகாணங்களின் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் 15 அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில் 16 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் பிராந்தியம் தரப்பில் தெரிவித்துள்ளது.