இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடயிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது .

தென்னாப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது .
இந்த தொடரின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார்.
இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெறவுள்ளது.
உலக புகழ் பெற்ற ஜோனஸ்பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் பேட்டிங்கை தவிடுபிடி செய்ய இந்திய அணி களமிறங்கி உள்ளது.
சூரியகுமார் தலைமையிலான இளம் படை டி20 தொடரில் பட்டயகிளப்பிய நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரில் ஆதிக்கம் செல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.