சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து ஈரோடு நோக்கி ஆம்னி வானில் ஒரு வயது குழந்தை உள்பட 8 பேர் சென்றுள்ளனர். இந்த வாகனம் சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையின் சின்ன கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் அதிகாலை சென்று கொண்டிருந்த போது அங்கு நிறுத்தி வைக்கபட்டிருந்த ஈச்சர் லாரின் பின் பகுதியில் வேகமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி முழுவது லாரியின் அடியில் சிக்கி நொறுக்கியது. இந்த விபத்தில் செல்வராஜ், பழனிசாமி, பாப்பாத்தி, மஞ்சுளா, ஆறுமுகம்மற்றும் 1 வயது குழந்தை சஞ்சனா உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் எஸ்.பி அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி.ராஜா மற்றும் தாசில்தார் அறிவுடை நம்பி ஆகியோர் விபத்து நடந்த இடத்தில் பார்வையிட்டனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.