உத்தர பிரதேசத்தில் கார் மீது லாரி மோதி சுமார் 500 மீட்டர் வரையில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கார் மீது லாரி மோதி சுமார் 500 மீட்டர் வரையில் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ். இவர் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரின் கார் மீது கண்டெய்னர் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்ற பிறகு நின்றதாக கூறப்படுகிறது.
லாரி மோதி 500 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச்செல்லப்பட்ட கார்… – பதைபதைக்க வைக்கும் வீடியோ!#UttarPradesh #Accident pic.twitter.com/pqNNEMnyqk
— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) August 8, 2022
பின்னர் விபத்தில் சிக்கிய தேவேந்திர சிங்கை மீட்டு அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு அருகிலிருக்கும் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இந்த விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் கார் மீது லாரி மோதி சுமார் 500 மீட்டர் வரையில் இழுத்து சென்ற வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.