Samantha’s Deepfake Photo : நடிகை சமந்தாவின் டீப் பேக் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வந்த அதற்கு சமந்தா சரியான பதிலடி கொடுத்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி கியூட் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார். இவர் நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
இதனிடையே சமந்தா வாழ்க்கையில் ஒரு பேரிடியாக திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : கேரளாவில் பரவும் மர்ம காய்ச்சல்.. அனைத்து மாவட்டங்களுக்கும் அதிரடி உத்தரவு!
சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா அவரது நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
கடந்த மாதம் தனது பிறந்தநாளின் போது, தனது சொந்த தயாரிப்பில், தான் கம்பேக் கொடுக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படம் குறித்தும் அறிவித்து இருந்தார்.
தற்பொழுதும் மையோசிடிஸ் நோய்க்காக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார் சமந்தா. இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமந்தா தனது சிகிச்சை தொடர்பான புகைப்படம் ஒன்றை அண்மையில் பகிர்ந்திருந்தார்.
அதாவது உடல்வலியைக் குறைக்கும் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், டவல் மட்டும் கட்டி இருக்கிறார் சமந்தா.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த சில சமூக விரோத விஷமிகள் தகாத முறையில் எடிட் செய்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வந்தனர்.
இது சமந்தா ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படம் வைரலான நிலையில், இதுதொடர்பாக சமந்தாவின் டீம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
அந்த டீப் பேக் புகைப்படத்தை பரப்பிய ஐடியை பிளாக் செய்து அந்தப் புகைப்படத்தையும் இணையத்தில் இருந்து நீக்கினர் Samantha’s Deepfake Photo.
இந்த சூழ்நிலையில், இதற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘நீங்கள் உண்மையாகவும், உங்கள் பக்கம் உண்மையும் இருந்தால், உங்களைப் பற்றி ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.!