வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் கூட்டமானது வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். இதன் காரணமாக தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு தடை விதித்துள்ளது.
மார்கழி மாதம் மற்றும் தைப்பூசம் வருவதை முன்னிட்டு முருகன் கோவில்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் நேற்று பக்தர்கள் பெருமளவு குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டது.

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரையை இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளவும், அதற்கு ஏற்றபடி பக்தர்கள் தங்களுடைய பாதயாத்திரையை திட்டமிட்டு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.