எந்தெந்த நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் -டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

tasmac-stores-in-tamil-nadu-on-3-days-holiday
tasmac stores in tamil nadu on 3 days holiday

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் முழு ஊரடங்கு தவிர இம்மாதம் மூன்று நாட்கள் மூடப்படும் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தின் போது, டாஸ்மாக் மூடப்பட்டிருந்த நிலையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.  இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜனவரி 15,18, 26ம் தேதிகளில் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18ஆம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் என்பதால் இந்த மூன்று நாட்களில் மதுபானம் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

tasmac-stores-in-tamil-nadu-on-3-days-holiday
tasmac stores in tamil nadu on 3 days holiday

மதுபான விற்பனையில்லா தினங்களாக இந்த நாட்கள் அனுசரிக்கப்படுகிறது என்பதால் இந்த மூன்று நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்களை, கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அன்றைய தினமும் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts