பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிப்பிக்குள் முத்து என்ற தொடரின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நண்பர்களாக இருந்து பின்னர் மாறிய நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா திருமணம் செய்துகொள்ள போவதாக திடிரென அறிவித்தனர் .
திருமண செய்தி கேட்டு மகிழ்ந்த அவரது ரசிகர்கள் சின்னத்திரையில் மீண்டும் ஒரு சூப்பரான காதல் ஜோடி என அவர்களை கொண்டாடினர் . இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் சில பல காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா பிரிந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் இவர்கள் எதற்காக காதலித்தார்கள் எதற்காக திருமணம் செய்தார்கள் தற்போது எதற்காக பிரிந்தார்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வந்தனர் .
இதையயடுத்து ஆசை ஆசையாக திருமணம் செய்த இந்த காதல் ஜோடி இருவரும் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் .
இந்நிலையில் நடிகை சம்யுக்தா விஷ்ணு காந்த் தனக்கு அளித்த செக்ஸ் டார்ச்சர் குறித்து ஓப்பனாக பேசியிருந்தார் .
விஷ்ணுகாந்த்துக்கு செக்ஸை தவிர வேறு எதுவுமே தெரியாது .ஒரு மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை . 24 மணிநேரமும் மூடுலயே தான் இருப்பாரு. நான் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், என்னை வற்புறுத்தி அவரது இச்சைகளுக்கு அடிபணிய வைப்பார். நான் முக்கியமா அவரை பிரிந்து வந்ததற்கு காரணம், அவர் எனக்கு கொடுத்த செஸ் டார்ச்சர் தான் என கண்ணீருடன் பேசியிருந்தார் சம்யுக்தா.
இந்த பக்கம் விஷ்ணுகாந்த் சம்யுக்தா மேல் பல குற்றசாட்டுகளை முன்வைத்து அதன் ஆடியோ ஆதாரங்களையும் ஒவொன்றாக வெளியிட்டு வருகிறார் .நாலு சுவற்றுக்குள் முடியவேண்டிய பிரச்சனையை பொதுவெளியில் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் இருவரும் மாறி மாறி ஆதாரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களே அசிங்கப்படுத்திக்கொள்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உங்கள் குடும்ப விஷயம் உங்களுக்குள் பேசி சுமக்க முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி பொதுவெளியில் பேச வேண்டாம் என ரசிகர்கள் சிலர் சம்யுக்தாவுக்கு பாசத்துடன் அறிவுரை கூறியுள்ளனர்.
ஆனால் அறிவுரை சொன்ன ரசிகர்களை சம்யுக்த்தா அசிங்கமாக திட்டி உள்ளார் . இதனால் ரசிகர்கள் பலரும் அவரை தாறுமாறாக திட்டி வருகின்றனர். உங்களது ரசிகர்களாக இருக்கும் நாங்கள் உங்களுக்கு ஆறுதல் சொன்னால் எங்களை திட்டுகிறீர்களே என சம்யுகதாவை வசைபாடி வருகின்றனர் .
இவையனைத்தும் சம்யுக்த்தா மற்றும் அவரது கணவர் விஷ்ணுகாந்த இருவரின் இன்ஸ்டா பக்கத்தில் உள்ள கமெண்டுகளை பார்த்தாலே நமக்கு நன்றாக தெரிந்துவிடும் . நாளுக்கு நாள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் இவர்களின் பிரச்சனை எங்கு போய் எப்படி முடிய போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.