சின்னத்திரை முதல் பெரிய திரைவரை காதல் திருமணம் செய்த எத்தனையோ ஜோடிகள் பலருக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்துகாட்டி வரும் நிலையில் சில ஜோடிகள் இப்படி வாழவே கூடாது என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து வருகின்றனர் .
அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிப்பிக்குள் முத்து சீரியல் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி நண்பர்களாக பழகி வந்த நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா . நாங்கள் திருமணம் செய்துகொள்ள போகிறோம் என திடிரென அறிவித்தனர் .

சின்னத்திரையில் மீண்டும் ஒரு காதல் ஜோடியா என்று அனைவரும் கிசுகிசுத்த நிலையில், இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி நடைபெற்றது .
காதலித்து திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பித்த இந்த ஜோடி தற்போது திருமணமான 2 மாதங்களிலேயே பிரிந்துவிட்டது .

இவர்கள் எதற்காக காதலித்தார்கள் எதற்காக திருமணம் செய்தார்கள் தற்போது எதற்காக பிரிந்தார்கள் என்று அனைவரும் குழம்பி நிற்கும் நிலையில் ,இருவரும் சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் .
இந்நிலையில் நடிகை சம்யுக்தா தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு தன் தாய், தந்தையுடன் வந்து அளித்துள்ள பேட்டியில், விஷ்ணு காந்த் தனக்கு அளித்த செக்ஸ் டார்ச்சர் குறித்து ஓப்பனாக பேசி உள்ளார்.

அதில் விஷ்ணு காந்த் குறித்து அவர் கூறியதாவது : விஷ்ணுகாந்த் எப்போதும் என்னையும், என் பெற்றோரையும் மரியாதையாக நடத்தியதே இல்லை. அவருக்கு செக்ஸை தவிர வேறு எதுவுமே தெரியாது .
ஒரு மனைவியை எப்படி நடத்தனும் என்கிற அடிப்படை அறிவு கூட அவருக்கு இல்லை . 24 மணிநேரமும் மூடுலயே தான் இருப்பாரு. என்னோட மனநிலையை அவர் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. நான் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், என்னை வற்புறுத்தி அவரது இச்சைகளுக்கு அடிபணிய வைப்பார்.
நான் முக்கியமா அவரை பிரிந்து வந்ததற்கு காரணம், அவருக்கு என்மேல் சுத்தமாக காதலும் இல்லை பாசமும் இல்லை. அவரை பொறுத்த வரை நான் ஒரு மிஷினாக தான் அவருக்கு தெரிஞ்சிருக்கேன். ஒரு செக்ஸ் வீடியோ பார்த்து இந்த மாதிரி பண்ணனும்னு சொல்லுவாரு.

இத்தனை நாட்கள் நான் இந்த அருவுருக்கத்தக்க கொடுமைகளை மீடியாவிடம் சொல்லாததற்கு காரணம் நிறைய உள்ளது அதை சொன்னால் எனக்கும் அசிங்கம். செய்யாத ஒரு தப்புக்காக நான் எதற்கு கெட்ட பெயருடன் வாழ வேண்டும் .
நான் விஷ்ணுகாந்தை ஏன் பிரிந்து வந்தேன் என்பதை மறைத்து , இப்போ என்னுடைய கடந்த கால வாழ்க்கை தான் பெரிய விஷயமா விஷ்ணு காந்த் சொல்லிட்டு இருக்காரு . அவர் என்னை ஒரு விபச்சாரியை விட கேவலமா நடத்துனாரு எனக்கூறி கண்கலங்கினார் சம்யுக்தா.

இதையடுத்து பேசிய சம்யுக்தாவின் தந்தை, விஷ்ணுகாந்த் செக்ஸ் மாத்திரை போட்டுக்கொண்டு தன் மகளை டார்ச்சர் பண்ணியுள்ளார். ஒரு மனைவிக்கிட்ட எவனாச்சும் ஆபாச படத்தை காட்டி இந்த மாதிரி பண்ணலாம், அந்த மாதிரி பண்ணலாம்னு சொல்லுவானா. அவர் இவ்ளோ டார்ச்சர் கொடுத்ததால் தான் ஒரு மாதத்தில் அவரை பிறந்து எனது மகள் வந்துவிட்டாள் என கூறியுள்ளார் .
ஒருபக்கம் சம்யுக்தா விஷ்ணுகாந்த் மேல் அதிபயங்கர குற்றசாட்டுகளை முன்வைக்க மறுபக்கம் விஷ்ணுகாந்த் சம்யுக்தா மேல் பல குற்றசாட்டுகளை முன்வைத்து அதன் ஆடியோ ஆதாரங்களையும் ஒவொன்றாக வெளியிட்டு வருகிறார் . இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இவர்களின் பிரச்னை எங்கு போய் முடிய போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.