சந்தானம் நடிப்பில் வெளியான 80s Buildup படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவான 80ஸ் பில்டப் திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.இப்படம் வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் இப்படத்தை காண திரையரங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், சுந்தர் ராஜன், ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனினீஸ்காந்த் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் மூச்சை போட்டு நடித்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது நிதர்சனமான உண்மை .

இந்நிலையில் இப்படம் இதுநாள் வரை செய்துள்ள வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது . அதன்படி இப்படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவில் சுமார் 3.21 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலும் இல்லாமல் திரையரங்குகளில் கூட்டமும் இல்லாமல் எம்டியாக இருப்பதால் படக்குழுவினர் தற்போது சோக கடலில் மூழ்கி உள்ளனர்.