கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தெய்வமாக இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா (EX CM Jayalalitha) நிச்சயமாக தண்டனையை பெற்றுத் தருவார் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக வலம் வந்தவர் வி.கே.சசிகலா.
ஜெயலலிதா சினிமாவில் இருந்த காலத்தில் இருந்தே அவருக்கு பக்கபலமாகவும் அரசியலில் அவருக்கு முழு கவசமாக இருந்த சசிகலா ஜெயலலிதா செல்லும் இடங்களுக்கு அவருடன் எப்போதும் செல்வார்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதா தனக்கென தனி சொகுசு பாகங்களவை கட்டி அங்கு பல ஏக்கரில் எஸ்டேட்டுகளையும் வாங்கி தனி சாம்பிராஜ்யத்தை உருவாக்கி வைத்திருத்தனார்.
கோடை வந்தால் போதும் ஜெயலலிதா ஓய்வுக்காக தனது தோழியான சசிகலாவை தன்னுடன் அழைத்துகொண்டு கெத்தாக ஹெலிகாப்டரில் வந்து இறங்குவாராம்.
(EX CM Jayalalitha) இந்நிலையில் ஜெயலலிதா மறைந்த பல ஆண்டுகள் ஆன நிலையில் அங்கு யாருமே செல்வதில் ஏன் சசிகலாவே அங்கு சென்று 7 ஆண்டுகளுக்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை சென்றிருக்கிறார்.
கொடநாடு எஸ்டேட் எஸ்டேட் பங்களா முன்பு மறைந்த நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் சிலையை வைக்க நடத்தப்பட்ட பூமி பூஜையில் பங்கேற்க தான் அங்கு சென்றுள்ளார்.
கடைசியாக 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கொடநாடு எஸ்டேட் எஸ்டேட் பங்களாவில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பூமி பூஜை பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது :
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தெய்வமாக இருந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிச்சயமாக தண்டனையை பெற்றுத் தருவார் என நம்புகிறேன் .
Also Read : https://itamiltv.com/mgr-birthday-aiadmk-public-meeting-postponed/
அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சித்து வருகிறேன், அந்த நடவடிக்கை விரைவில் வெற்றி அடையும் அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்
எனது தோழி இல்லாமல் இங்கு வந்துளேன் அவருடனான நினைவுகளை தினம் தினம் நினைத்து பார்க்கிறேன் என கண்கலங்கிய படி கோடநாடு எஸ்டேட்டில் வி.கே.சசிகலா பேட்டி அளித்துள்ளார்.