மதுரையில் பள்ளிக்கு தாலி அணிந்து வந்த மாணவியால் பெற்றோர் மற்றும் திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி, பள்ளிக்கு தாலி அணிந்து சென்றுள்ளார். தகவல் அறிந்து பள்ளிக்குச் சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள், மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மாணவியின் பெற்றோர் மற்றும் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.