நீலகிரி மாவட்டத்தில் நாளை ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் சற்று குறைவடைந்த நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக சென்னை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த மாதம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை குறைவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் பள்ளி கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடுமுறையை ஈடு கட்டும் வகையில் இன்னொரு நாளில் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.