கரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கரூர், அணைப்பாளையம், பரமத்தி, கிருஷ்ணாபுரம், மாயனூர், அரவக்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
நேற்று முதல் மழை தொடர்ச்சியாக மழை பெய்தது வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.