சனிக்கிழமைகளில் பள்ளிகள் கட்டாயம்.. – பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய புதிய சுற்றறிக்கை

Spread the love

கடந்த காலங்களில் கொரோனா தொற்று காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுகட்டுவதற்கு,அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு நேரடியாக கல்வி கற்கும் முறை தடைபட்டதோடு,ஆன்லைன் வகுப்புகள் பெருமளவு நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 1 முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்பின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதன்பின் தீபாவளிக்காகவும், பின் மழைக்காகவும் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


Spread the love
Related Posts