கொளுத்தும் வெயிலின் காரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை (summer holidays) நீட்டிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், கோடை விடுமுறைக்குப் (summer holidays) பின்னர் நாளை (16.05.23) பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அம்மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தினாலும், மேலும் வெப்ப அலை நீடிப்பதாலும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோடை விடுமுறையை நீட்டிக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை மாநில அரசு தள்ளி வைத்திருக்கிறது.
அதன்படி, நாளை 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்து உள்ளது.
கோடை விடுமுறை நீட்டிப்பு தொடர்பாக முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் அறிவுறுத்தலின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும், இது குறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.