ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு இன்று விசரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் ஜூன் 15-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .
இதனை தொடர்ந்து, அவர் ஜாமின் மனுக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். எனினும் கடந்த ஜூன் 16 தேதி மற்றும் செப்டம்பர் 26 தேதிகளில்
தாக்கல் செய்யபட்ட மனுக்களை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமின் மீதான மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், உடல்நல குறைவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அறுவைசிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடையாத நிலையில் மீண்டும் திங்கட்கிழமை உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சிறையில் இருந்தவாறு சிகிச்சை மேற்கொள்ள சிரமாக உள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் NRஇளங்கோவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயசந்திரன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தார்.