இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் :
இலங்கை அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது; தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க உட்பட, 38 பேர் களத்தில் உள்ளனர்; தேர்தல் முடிவு நாளை வெளியாகிறது.
டெல்லி முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் அதிஷி :
தற்போது முதல்வராகப் பதவியேற்க உள்ள அதிஷி மர்லினா 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியின் புதிய பெண் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையும் இன்று பதவியேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி பத்திரத்தை தடுக்க புதிய முறை இன்று அமல் :
போலி பத்திரப்பதிவை தடுக்க கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி: இன்று செப்., 21 முதல் பயன்படுத்த பதிவுத்துறை அனைத்து மாவட்ட சார்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தல்.
நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை :
திண்டுக்கல்லில் நெய் விநியோகித்த ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உமா சோதனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பதி கோயிலில் மாட்டுக் கொழுப்பு கலந்த நெய்யால் லட்டு தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சையை தொடர்ந்து ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய் மாதிரிகளை சேகரிக்க அதிகாரிகள் வந்துள்ளனர்.
மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம் :
கர்நாடகாவில் அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் விடுப்பு வழங்க அரசு பரிந்துரை செய்துள்ளது. தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில் மட்டுமே இந்த சலுகை அமலில் உள்ளது. கேரளாவில் 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பிடிபட்ட விவகாரம் :
பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதி பெற்றே விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது
“₹4 கோடி வழக்கில் சம்மந்தப்பட்ட ஹார்ட்டிஸ்க் காணாமல் போயுள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விசாரிக்க முடியுமா?” என சிபிசிஐடி தரப்பில் வாதம்
வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், சம்மந்தப்பட்ட நபருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கி விசாரணைக்கு அழைக்க வேண்டும் என அறிவுறுத்தல்