பெங்களூருவில் 15 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று மாநில துணை முதல்-மந்திரியின் வீட்டின் எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிக்கூடங்களுக்கு இமெயில் மூலம் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுதுத்துள்ளார். அதையடுத்து, உடனடியாக இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து வந்த போலீசார், பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். பின்னர், பள்ளிக்கூடங்களில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்த இமெயில் போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று மாநில துணை முதல்-மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ள நிலையில், 15 பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல்
சம்பவத்தால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.