பிரான்ஸில் மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்த கொடூர கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் டொமினிக் பெலிகாட் என்ற நபர் தனது மனைவி கிசெல் பெலிகாட்க்கு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆண்களுடன் சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார்.
கிசெல் பெலிகாட்க்கு மயக்க மருந்து கொடுத்து பல்வேறு ஆண்களுடன் இணைந்தும், அவர்களை கொண்டும் டொமினிக் பெலிகாட் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் . இதற்காக ஆன்லைனில் அவர் ஆட்களை தேர்வு செத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
Also Read : ஜெய்ப்பூரில் ரசாயன டேங்கர் மீது லாரி மோதி விபத்து நிகழ்ந்த கோர விபத்து..!!
இதையடுத்து தந்தையின் இந்த கொடூர செயல் குறித்து அறிந்த பிள்ளைகள் தந்தை மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் . இந்த வழக்கை சுமார் 3 மாதங்களாக விசாரணை செய்ததில் சுமார் மூன்று மாத காலம் நடந்த இந்த வழக்கு விசாரணையில் டொமினிக் பெலிகாட்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் குற்றம் சுமத்தப்பட்ட 51 பேருக்கு 3 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள்ளது.
டொமினிக் பெலிகாட் தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை சிறையில் அனுபவிக்கும் வரையில் பரோல் பெற அவருக்கு தகுதி இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.