உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த செப் 7 ஆம் தேதி கோலாகலமாக வெளியான ஜவான் படம் தற்போது வசூலில் 1000 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழில் தளபதியை வைத்து 3 சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீயின் இயக்கத்தில் பாலிவுட் பாஷா என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கானின் அசரவைக்கும் நடிப்பில் கடந்த 3 வருடங்களாக உருவான திரைப்படம் ஜவான் .

ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் இமாலய பொருட்செலவில் படு பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு , தீபிகா படுகோனே, ப்ரியா மணி,ஜாபர் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று கூடி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 7 ஆம் தேதி கோலாகலமாக வெளியான நிலையில் படத்திற்கு பாசிட்டிவ் , நெகட்டிவ் என கலவையான விமர்சனங்கள் வந்தாலும் மறுபக்கம் வசூலில் பட்டய கிளப்பி வந்தது .
இந்நிலையில் ஜவான் படம் நேற்றோடு 1000 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் முதன் முறையாக 1000 கோடி வசூலை தொட்ட இயக்குனர் என்ற பெருமையை அட்லீ பெற்றுள்ளார்.