தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல நடன இயக்குனர்! – உதவி கேட்ட மகன்!

shivashankar-master-affected-with-covid19-and-now-in-critical-condition-
shivashankar master affected with covid19 and now in critical condition-

பிரபல நடன இயக்குநரான சிவசங்கர் மாஸ்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனர் சிவசங்கர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் மூலம் இவரது புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

பூவே உனக்காக, உளியின் ஓசை, விஷ்வதுளசி, வரலாறு போன்ற திரைப் படங்களுக்கு சிறந்த நடன ஆசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார் சிவசங்கர்.
மேலும் அஜித் நடித்த வரலாறு, சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடன இயக்குநர் சிவசங்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்ற நிலையில் அவருடைய குடும்பத்தினரிடத்தில் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும், சினிமா பிஆர்ஓ நிகில் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

shivashankar-master-affected-with-covid19-and-now-in-critical-condition-
shivashankar master affected with covid19 and now in critical condition

இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள் என சிவசங்கர் மாஸ்டரின் மகன் உதவி கேட்டுள்ளார்.
பிரபல நடன இயக்குநரான சிவசங்கர் மாஸ்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Total
0
Shares
Related Posts