தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவகாற்றின் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தின் சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வா னிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.