நாக்பூரை சேர்ந்தவருக்கு ஒமிக்ரான்.. – இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வரை உலகம் முழுவதும் ஏறத்தாழ 59 நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த நவம்பரில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், நாக்பூர் பாதிப்பை தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

Total
0
Shares
Related Posts