இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரன்கள் குவித்தது இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியினால் 332 ரன்கள் குவிக்க முடிந்தது. இறுதி கட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியில் திரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இந்த இமாலய ரன் குவிப்பில் முக்கிய பங்காக அமைந்தது அணியின் தொடக்க வீரரான சுபம் கில்லின் அதிரடியான 200 ரன்கள். போட்டியின் தொடக்கம் முதலே கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சீராக ரன் குவிந்தது. அவருடன் தொடக்கத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கான சிறப்பான அடித்தளம் அமைத்தார். அதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்த கில் பௌண்டரியும், சிக்சர்களுமாக விளாசி பந்து வீச்சாளர்களை அச்சுறுதினார்.
இந்த அதிரடியால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது 200 ரன்னை அடித்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக இரட்டை சதம் விளாசம் ஐந்தாவது வீரராக கில் இணைந்துள்ளார். முதல் இரட்டை சதம் அடித்ததில் பெரும் சாதனையை முறியடித்துள்ளார், மிக இளம் வயதில் ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னதாக பங்களாதேஷ் அணியுடன் இசான் கிஷன் இரட்டை சதம் அடித்தார். அந்த சாதனையை 23 வயதான கில் முறியடித்து 200 விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை தற்போது முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியிலே மிகவும் முக்கிய நிகழ்வாக கில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் பேசப்பட்டு வருகிறது. 182 ரன்கள் எடுத்த நிலையில் 200 ரன்கள் குவிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை அடித்து அசால்ட்டாக 200 ரன்களை கடந்தார். சமீப காலமாக கில் சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருவதால் அணியில் அவருக்கான இடம் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடக்க வீரராக நல்ல அடித்தளம் அமைப்பது, சிறந்த ஷாட் விளையாடுவது என பேட்டிங்கை மிக அற்புதமாக வெளிகாட்டுவதில் கில் சிறப்பு பெற்றுள்ளார். மேலும் வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஆகிய போட்டிகள் இந்த வருடத்தில் அடுத்தடுத்து வர உள்ளதால் கில்லின் அசாத்திய பேட்டிங் திறமை இந்திய அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் ஆயுதமாக அமைந்துள்ளது.