தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர்களில் ஒருவரான வலம் வரும் நடிகர் சிபிராஜின் நடிப்பில் உருவாகி உள்ள டென் ஹர்வஸ் திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்ததா இல்லையா என்பது குறித்த திரை அலசலை காணலாம்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 25 பயணிகளுடன் ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டு செல்கிறது. சேலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது நள்ளிரவு நேரத்தில் பஸ்ஸில் ஒரு கொலை சம்பவம் நிகழ்கிறது .
அப்படியே மறுபுறம் சேலம் ஆத்தூர் எல்லைக்குட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ் சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்டு, அன்று இரவு சபரிமலை கோவிலுக்கு புறப்பட தயாராகிறார். அப்போது பெண் ஒருவரை காணவில்லை என காவல் நிலையத்திற்கு போன் ஒன்று வருகிறது.
உடனே விசாரணையை தொடங்கும் சிபி ராஜிற்கு அடுத்தடுத்து பல இன்னல்கள் ஏற்படுகிறது. 10 மணி நேரத்தில் வரிசையாக பல கொலைகள் நடக்கிறது. இந்த தொடர் கொலைகளுக்கான பின்னணி என்ன? யார் அந்த கொலையாளி? எதற்காக கொலை செய்தார்கள்? இதை சிபிராஜ் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.
Also Read : நங்கூர வெற்றியை பதிவு செய்ததா நாங்கள் திரைப்படம் – திரை விமர்சனம்
கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் பல ட்விஸ்டுகள் ஒளிந்திருந்தாலும் ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி பல அழகிய காட்சிகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்.
படத்தில் ஹீரோயின் இல்லாமல், பாடல் இல்லாமல் முற்றிலும் சஸ்பென்சாக கதையை நகர்த்திச் சென்றது இயக்குநரின் சிறப்பான தரமான சம்பவம் என கூறலாம்.
பரபரப்பாக செல்லும் கதையில் ஆங்காங்கே வரும் காமெடிகள் கலகலப்பை ஏற்படுத்துகிறது. ஒரு பேருந்துக்குள் முடிந்த வரை காட்சிகளை ரசிக்கும் படியாக கொடுத்து கதைக்கேற்ற மூடை நமக்கு தேவையான அளவு கொடுத்துள்ளார் இயக்குநர் .
இந்த கதைக் கரு வித்தியாசம் என்றாலும் அதை காட்சிப்படுத்திய விதம் புதுமையாக இல்லை என்று தோன்றுகிறது . இருப்பினும் 2 மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் கட்டி போட்ட இயக்குனருக்கு தனி பாராட்டை கொடுக்க வேண்டும். மொத்தத்தில் டென் ஹர்வஸ் திரைப்படத்திற்கு 7.5 / 10 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.