தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினாவில் தொடங்கி பிரின்ஸ் வரை 10 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியுள்ளார். இவருடைய 21வது (sk21) திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இணைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இன்னும் சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது, SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும், அதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் காஷ்மீர் சென்று ராணுவ பயிற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, நடிகர் கமலஹாசன் “ஆளவந்தான்” திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடிப்பதற்காக ராணுவ பயிற்சிக்கு சென்றிருந்தார். இந்நிலையில், அவரை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனும் கமலை பலோவ் செய்துள்ளார்.