சிவகார்த்திகேயன் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் SK21 படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்காகி செம வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் SK21 . இதுவரை பெயரிடப்படாத இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்கள் காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது. லீக்கான அந்த காட்சியில் சாய்பல்லவி கையில் குழந்தையுடன் காத்திருப்பது போல உள்ளது.