சூரிய குடும்பத்தில் முழு சூரிய கிரகணத்தைக் காணக்கூடிய ஒரே கிரகம் பூமி மட்டுமே. ஒவ்வொரு 18 மாதங்களுக்கும், (solar eclipse) பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இந்த அற்புத நிகழ்வு இன்று நடைபெற உள்ளது சூரிய கிரகண நிகழ்வை காண உலகெங்கிலும் உள்ள மக்கள் செம ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிகழ்வை அனைத்து நாடுகளும் காண முடியாதாம் . 18 மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்வும் இந்த அரிய நிகழ்வை ஒரு சில நாடுகளே காண முடியுமாம் .
வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் இருக்கும். இந்த சூரிய கிரகணம் கனடா, அமெரிக்கா முதல் மெக்சிகோ வரை தெரியும்.
முந்தைய சூரிய கிரகணங்களை விட இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால், இந்த காலக்கட்டத்தில் பல சோதனைகளை நடத்த நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும் என்பதிலிருந்து இது எவ்வளவு அரிதான நிகழ்வு என்பதை அறியலாம்.
Also Read : https://itamiltv.com/ipl-ticket-fraud-through-fake-website-cybercrime-police-shocking-information/
சந்திரன் சூரியனை விட பூமிக்கு 400 மடங்கு நெருக்கமாக உள்ளது, ஆனால் சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது.
இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக வரும்போது, அது சூரியனை மறைப்பதல் நாம் கிரகணத்தைக் காண்கிறோம்.
சூரிய கிரகணத்தைப் பொறுத்தவரை சில நேரங்களில் தெரியும், சில நேரங்களில் தெரியாது. இந்த சூரிய கிரகணம் முக்கியமானது. ஏனெனில், இந்த நிகழ்வை லடசக்கணக்கான மக்கள் காண முடியும். இந்த கிரகணத்தை 31 லட்சம் பேர் பார்க்க முடியும் என ஒரு மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள என்.சி. ஸ்டேட் பல்கலைக்கழகம், இந்த (solar eclipse) கிரகணத்தின் போது வனவிலங்குகளுக்கு ஏற்படும் விளைவு குறித்து ஆய்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.