ஆர்ஜே பாலாஜி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்ட சொர்க்கவாசல் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராகவும் , திறமையான நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.ஜே. பாலாஜி இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் தற்போது பல படங்கள் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சொர்க்கவாசல் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்றது.
Also Read : டாட்டூ மூலம் ஏகபோக சம்பாத்தியம் “ஏலியன் பாய்” குறித்து வெளியான பகீர் தகவல்..!!
சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், சிறையில் நடக்கும் சம்பவங்களை கொண்டு மையமாக உருவாக்கப்பட்டது .
ஆர்.ஜே.பாலாஜி , சானியா ஐயப்பன் , கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.