ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற Spain Investors தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தது பேருரை ஆற்றினார்.
மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன
130க்கும் மேற்பட்ட Fortune 500 நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று.
இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
மின்சார வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும்
தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது
தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.
பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு. பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகள் அளிக்க உள்ளோம்.
Spain Investors ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் எங்கள் பொன்னான பூமியில் உங்கள் முதலீடுகளை தாராளமாக செய்யுங்கள்.
தமிழ்நாட்டிற்கு 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மேலும் பல முதலீடை ஈர்ப்பதற்கு கடந்த 27 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு பறந்து சென்றார்.
Also Read : https://itamiltv.com/gandhi-memorial-president-prime-minister-honour/
8 நாட்கள் ஸ்பெயினில் இருக்கும் முதல்வர் சொன்னது சொன்னபடி பல தொழில் முதலீடுகளை ஈர்த்து பிப்ரவரி 7-ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார் .
இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் மேலும் பல யோசனைகளை முதலீட்டாளர்களுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது .