வாரயிறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் ( Special buses for wk end ) இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
இன்று ஜூன் 21 ஆம் தேதி நாளை 22 மற்றும் 23ம் தேதி ஆகிய நாட்கள் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 600 பேருந்துகளும், நாளை 410 பேருந்துகளும் இயக்கப்படும்.
இதையடுத்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் ( Special buses for wk end ) தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.