எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை மன்னார் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
இதையடுத்து தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரியும் அவர்களின் படகு மற்றும் வலைகளை விடுவிக்கக்கோரியும் இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலவர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
Also Read : ஜாபர் சாதிக்கின் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கம்..!!
மத்திய மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று இலங்கை அரசு சில மீனவர்களை விடுவித்தது. இந்நிலையில் தற்போது விடுதலையான 5 பேர் உட்பட 8 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் தலா 18,000 அபராதம் விதித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 ஆயிரம் அபராதம் செலுத்த தவறினால், 6 மாதம் சிறைக்காவல் தண்டனை கொடுக்கப்படும் என்றும் இலங்கை மன்னார் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.