அக்டோபர் மாதம் 16 தேதி தொடங்கவிருக்கும் 7 வது t20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கு பெறுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, ஆப்கனிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து தொடரில் பங்கு பெரும் அணிகள் தங்களது உலககோப்பை அணியை அறிவித்து வருகின்ற. நேற்று இலங்கை அணி தனது உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது. ஆசிய கோப்பையை வென்ற அணியிலிருந்த பெரும்பாலான வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர் கூடுதலாக சில வீரர்கள் சேர்க்க பட்டுள்ளனார்.
அணி விவரம் :
இந்த அணிக்கு ஆசிய கோப்பை அணியின் தலைவராக இருந்த தசுன் ஷணக்கா தலைமை வகிக்கிறார். மேலும் இந்த அணியில் வேக பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீரா, லகிரு குமரா இடம்பெற்றுள்ளனர். ஆனால் இவர்களது உடற் தகுதி பொறுத்தே ஆட்டத்தில் சேரக்கப்படுவார்கள்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை 6 வது முறையாக கோப்பையை வென்றது. ஆனால் உலககோப்பை போட்டியின் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறாததால் அதற்கு முந்தய தகுதி சுற்றில் நமீபியா, யூஎஇ அணிகளுடன் விளையாடவுள்ளது. இந்த சுற்றில் தகுதி பெரும் முதல் 2 அணிகள் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று உலக கோப்பை போட்டியில் பங்கு பெற முடியும்.