ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானை பக்தர்களுக்கு சாக்லேட் கொடுத்து தனது 44-வதி பிறந்த நாளை கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டாள்,லட்சுமி என்ற இரு யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் ஆண்டாள் யானைக்கு நேற்று 44வது பிறந்தநாள் ஆகும்.
கடந்த 28-02-1979 ஆம் ஆண்டு பொள்ளாச்சி வனப் பகுதியில் பிறந்த ஆண்டாளைத் திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கி வளர்த்து வந்துள்ளார். பின்னர் காரமடை ரங்கநாத சுவாமி ஆலயத்திற்குத் தானமாக வழங்கினார்.

இந்த யானை நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ”தம்பிக்கு எந்த ஊரு” என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் வழங்கும் உள்ளிட்ட காட்சிகளில் நடித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆண்டாள் யானை முறைப்படி எழுதி வாங்கி அதை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குத் தானமாக வழங்கினார்.
இந்த நிலையில் தான் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோவிலுக்கு 17.10 .1986 அன்று முதல் சேவை செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தனது 44வது பிறந்த நாளை முன்னிட்டு குளித்து புத்தாடை அணிந்து நகைகளை மாட்டிக்கொண்டு,

கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பக்தர்களுக்குக் கூடையில் சாக்லெட்டைத் தூக்கிக்கொண்டு வந்து கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சாக்காட்டை எடுத்துக் கொண்ட பக்தர்கள் நெகிழ்ச்சியோடு ஆண்டாள் யானையிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
பின்னர் ஆண்டாள் யானைக்குப் பல்வேறு வகையான பழங்களை உண்பதற்குக் கொடுக்கப்பட்டது. தற்பொழுது ஆண்டாள் யானை பக்தர்களுக்கு சாக்லேட் கொடுத்து பழங்களைத் தின்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.