நீதிமன்ற சம்மனை ஓரங்கட்டிய எச்.ராஜா.. பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி..!

முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.20-ம் தேதி, வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள், அவர்களின் உறவினர்களை அவதூறாக பேசியதாக எச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பாஜக சார்பில் இன்று பழனியில், நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்குபெற்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts