உ.பி. பாணியில் கொடூரம்: ஹரியானாவிலும் விவசாயிகள் மீது பாய்ந்த கார்..!

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதே பாணியில் ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கார் புகுந்து விவசாயி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று ஹரியானா மாநிலம் நரேன்கர்க் பகுதிக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக எம்.பி. நயாப் சைனி மற்றும் எம்எல்ஏ சந்தீப் சிங் ஆகியோர் வருவதாக இருந்தது. இதனால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது கார் ஒன்று வேகமாக வந்து விவசாயிகளின் மீது மோதியுள்ளது. இதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரை இயக்கிய பாஜக எம்.பி:

வாகனத்தை பாஜக எம்.பி நயாப் சைனி இயக்கியதாகவும், அவருக்கு எதிராக FIR பதிவு செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு செய்யாவிட்டால் அக்டோபர் 10 ஆம் தேதி காவல்நிலையத்தை சுற்றி வளைப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே போராட்டத்தின்போது 2 விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதே பாணியில் ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts